நீலகிரியில் பொது மக்கள் தங்களது குறை தீர்க்கும் கோரிக்கைகளை தெரிவிக்க "உங்களின் சேவை" அறிமுகம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் தங்களது குறை தீர்க்கும் கோரிக்கைகளை தெரிவிக்க உங்களின் சேவை என்ற வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் முகநூல் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்ட பொது மக்கள் தங்களது குறைதீர்க்கும் கோரிக்கைகளை பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்டோபர் 3-ம் தேதி முதல் "உங்களின் சேவையில்" பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள், புகார் மனுக்கள் மற்றும் கருத்துகளை மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பதிவு மற்றும் ட்விட்டர் மூலமாக பொதுமக்கள் கீழ்க்கண்ட இணைய வழியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

இணைய வழி முகவரி:

www.facebook.com/collector Nilgiris

www.twitter.com/collrnlg

மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்: 99431 26000.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...